/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
3 கிலோ கஞ்சா பறிமுதல் அசாம் வாலிபர்கள் கைது
/
3 கிலோ கஞ்சா பறிமுதல் அசாம் வாலிபர்கள் கைது
ADDED : அக் 06, 2025 02:18 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இருவரை கைது செய்தனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக, ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மதியம், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த இருவரிடம், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஷாஆலோம், 31, மற்றும் மாபிகில்ஹேக், 30, என, தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் இருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இருவரையும் திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, வழக்கு பதிந்த மதுவிலக்கு போலீசார் விசாரிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 30,000 என, தெரியவந்தது.