ADDED : நவ 10, 2026 08:47 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி அடுத்த அருங்குளம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு, 30. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மகேந்திரன், 27.
இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று (நவ.,9), மகேந்திரனுக்கும், பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன், உருட்டு கட்டையால் பாபுவை தாக்கினார். இது குறித்து, பாபுவின் மனைவி ராதா கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்து விசாரித்த கனகம்மாசத்திரம் போலீசார், இன்று (நவ.,10) மகேந்திரனை கைது செய்தனர்.
