/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் வளர்ச்சி பணிகள் நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் ஆய்வு

ADDED : மே 16, 2025 02:48 AM

திருத்தணி, மே 16-
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தேர்வீதி விரிவாக்கம், ராஜகோபுரம் இணைப்படிகள், பக்தர்கள் உணவு அருந்தும் அன்னதான கூடம், இரண்டாவது மலைப்பாதை, கார்த்திகேயன் குடில் விரிவாக்கம் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள், 103 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணிகளுக்கு டெண்டரும் விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட நகர ஊரமைப்பு துறை உதவி இயக்குனர் சஹகானா நேற்று திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார்.
கோவில் இணை ஆணையர் ரமணி வரவேற்று, முருகன் கோவிலில் நடைபெற உள்ள வளர்ச்சி பணிகள் விவரம் குறித்து உதவி இயக்குனரிடம் விளக்கி கூறினார்.
தொடர்ந்து உதவி இயக்குனர், வளர்ச்சி பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று, வரைப்படம் பார்வையிட்டு, கட்டட அனுமதி வழங்குவதற்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்து கோவில் நிர்வாகிகள் மற்றும் பொறியியல் பிரிவு அலுவலர்களிடம் கூறினார்.
தொடர்ந்து ராஜகோபுரம், தேர்வீதி விரிவாக்கம், அன்னதானம் போன்ற இடங்களிலும் ஆய்வு செய்த உதவி இயக்குனர் விரைவில், கட்டட அனுமதி வழங்கப்படும் என, தெரிவித்தார்.
★★