/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வண்டல் மண் எடுக்க லஞ்சம் உதவி பொறியாளர் கைது
/
வண்டல் மண் எடுக்க லஞ்சம் உதவி பொறியாளர் கைது
ADDED : அக் 19, 2024 01:02 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுகா ஸ்ரீவிலாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், 52. இவர் தன் 4 ஏக்கர் விவசாய நிலத்தை மேம்படுத்த ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க ஆன்லைன் வாயிலாக வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்தார். சில தினங்களுக்கு முன் ஆர்.கே.பேட்டை தாசில்தார் அனுமதியளித்தார்.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி என்பதால், மண் எடுக்க வேண்டிய இடத்தை திருத்தணி நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து தர வேண்டும். இதற்காக ரமேஷ் வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கிய அனுமதி கடிதத்துடன், நீர்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
நீர்வளத்துறை உதவி பொறியாளர் ரமேஷ், 50 ஏரியில் மண் எடுக்க வேண்டிய பகுதியை அளவீடு செய்து கொடுக்க விவசாயி ரமேஷிடம் 7,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
ரமேஷ் திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைபடி, 7,000 ரூபாயை உதவி பொறியாளர் ரமேஷிடம் நேற்று வழங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மாலா தலைமையிலான போலீசார் ரமேஷை கைது செய்தனர்.

