/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பா.ஜ.க., நிர்வாகி மீது தாக்குதல் மீஞ்சூர் காவல் நிலையம் முற்றுகை
/
பா.ஜ.க., நிர்வாகி மீது தாக்குதல் மீஞ்சூர் காவல் நிலையம் முற்றுகை
பா.ஜ.க., நிர்வாகி மீது தாக்குதல் மீஞ்சூர் காவல் நிலையம் முற்றுகை
பா.ஜ.க., நிர்வாகி மீது தாக்குதல் மீஞ்சூர் காவல் நிலையம் முற்றுகை
ADDED : மார் 21, 2025 11:43 PM
மீஞ்சூர், மீஞ்சூர் அடுத்த வல்லுாரைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 42; பா.ஜ., ஊடக பிரிவு திருவள்ளூர் மாவட்ட தலைவர்.
இவர், நேற்று முன்தினம் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, மதுபோதையில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், கோகுல கிருஷ்ணனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியது.
இதில், படுகாயமடைந்த கோகுலகிருஷ்ணன், பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், நேற்று பா.ஜ., கட்சியினர், மீஞ்சூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின், காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரின்படி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.