ADDED : ஜூன் 30, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, தாய், மகனை உருட்டு கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்தணி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சித்ரா, 45. இவரது மகன் விஷ்ணு, 25. இருவரும் நேற்று முன்தினம், அரக்கோணம் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, தனியார் மருத்துவமனை அருகே, திருத்தணியைச் சேர்ந்த விஜய், 24, அவரது நண்பர்கள் இருவர், முன்விரோதம் காரணமாக சித்ரா, விஷ்ணு ஆகியோரை வழிமடக்கி, உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்படி திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.