/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடனை திரும்ப கேட்டவர் மீது தாக்குதல்
/
கடனை திரும்ப கேட்டவர் மீது தாக்குதல்
ADDED : ஜூன் 15, 2025 08:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த வெங்கல்ராஜகுப்பத்தில், கடனை திரும்ப கேட்டவரை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு அடுத்த வெங்கல்ராஜகுப்பத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், 61. இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த அருள், 30, என்பவருக்கு, 10,000 ரூபாய் கடனாக கொடுத்திருந்தார்.
நேற்று முன்தினம் பணத்தை திரும்ப தரும்படி கேட்டதற்கு, ஆத்திரமடைந்த அருள், அவரது கையில் இருந்த திருப்புளியால், சொக்கலிங்கத்தின் கன்னத்தில் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரையும், திருப்புளியை காட்டி மிரட்டினார்.
இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.