/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ பதிவிட்டவர் கைது
/
கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ பதிவிட்டவர் கைது
ADDED : பிப் 15, 2025 08:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடி அடுத்த கோவில்பதாகையைச் சேர்ந்தவர் விஜய் என்கிற பிளாக்கி விஜய், 24; பழைய குற்றவாளி.
இவரது மனைவியின் சகோதரர் விஜய். மைத்துனர்கள் இருவருக்கும் குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 'உன்னை கொலை செய்து விடுவேன்' எனக்கூறி, பிளாக்கி விஜய் குறித்து, விஜய் சமூக வலைதளத்தில் ஆடியோ வெளியிட்டுள்ளார். தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், கோவில்பதாகையைச் சேர்ந்த விஜய், 19, அவரது நண்பர் தருண், 19, மற்றும் 17 வயது சிறுவனை, கைது செய்தனர்.

