/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சொத்து பிரச்னையால் ஆத்திரம் ஆட்டோ ஓட்டுநருக்கு வெட்டு
/
சொத்து பிரச்னையால் ஆத்திரம் ஆட்டோ ஓட்டுநருக்கு வெட்டு
சொத்து பிரச்னையால் ஆத்திரம் ஆட்டோ ஓட்டுநருக்கு வெட்டு
சொத்து பிரச்னையால் ஆத்திரம் ஆட்டோ ஓட்டுநருக்கு வெட்டு
ADDED : ஜூலை 22, 2025 09:24 PM
மப்பேடு:பேரம்பாக்கம் அடுத்த சின்னமண்டலி பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார், 36; ஆட்டோ ஓட்டுநர். இவருக்கும், உறவினர் சரண்ராஜ் என்பவருக்கும் சொத்து பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 20ம் தேதி இரவு, ஆட்டோ ஓட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சுனில்குமாரை, பேரம்பாக்கம் பெட்ரோல் 'பங்க்' அருகே வழிமறித்த சரண்ராஜ், கத்தியால் வெட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.
படுகாயமடைந்த சுனில்குமாரை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.