/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
/
ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
ADDED : நவ 19, 2025 05:27 AM
மீஞ்சூர்: அத்திப்பட்டு புதுநகரில், முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி, கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரைச் சேர்ந்தவர் பாண்டியன், 36; ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று, வீட்டருகே நின்று கொண்டிருந்த போது, ஐந்து பேர் கும்பல் அங்கு வந்து, பாண்டியனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, ரத்த காயங்களுடன் இருந்த பாண்டியனை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
விசாரணையில், 'அதே பகுதியைச் சேர்ந்த சூறைவேந்தன், 20, என்பவருடன் முன்விரோதம் இருந்தது தெரிந்தது. சூறைவேந்தன் மற்றும் அவரது நண்பர்கள், பாண்டியனின் வீட்டருகே தினமும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதை அவர் தட்டிகேட்டதால், கொலை முயற்சி சம்பவம் நடந்தது' தெரிய வந்தது.
இதை தொடர்ந்து, சூறைவேந்தன், 20, மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

