/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எண்ணூர் துறைமுகத்தில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
எண்ணூர் துறைமுகத்தில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
எண்ணூர் துறைமுகத்தில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
எண்ணூர் துறைமுகத்தில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 19, 2025 05:27 AM
மீஞ்சூர்: எண்ணுார் துறைமுக வளாகத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த மின் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி எண்ணூர் காமராஜர் துறைமுக வளாகத்தில், துணை மின்நிலையம் அமைந்துள்ளது.
இங்கு பணிபுரியும் ஒப்பந்த மின் ஊழியர்கள் நேற்று, நிரந்தர ஊழியர்களுக்கு ஈடான ஊதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய தொழில் தீர்ப்பாயம் உத்தரவுப்படி, நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மற்றும் சலுகைகளை தங்களுக்கும் வழங்க வேண்டும். துணை மின்நிலையத்தை பராமரிப்பு பணிகளுக்காக, தனியாரிடம் 'டெண்டர்' கோருவதை கைவிட வேண்டும் என, வலியுறுத்தினர்.

