/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தியாகி குடும்பத்திற்கு கலெக்டர் நிதியில் ஆட்டோ
/
தியாகி குடும்பத்திற்கு கலெக்டர் நிதியில் ஆட்டோ
ADDED : மார் 05, 2024 06:47 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அடுத்த நடுகுத்தகை பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணியம். இவரது மனைவி சாந்தா, பிப்.,19ல் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், தன் குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளதாகவும், பிழைப்பு நடத்த வழி இல்லாமல் இருப்பதாக மனு அளித்தார்.
தன் மகன் ரமேஷ் என்பவர், வேலையில்லாமல் வாடகை ஆட்டோ ஓட்டிக் கொண்டிருப்பதால், சொந்த ஆட்டோ வாங்க நிதி உதவி கோரினார்.
மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட தொழில் மையம் மற்றும் முன்னோடி வங்கி மூலமாக மானியத்தில் ஆட்டோ வழங்க பரிந்துரை செய்தார்.
ஆட்டோவின் மொத்த விலையான, 3.20 லட்சம் ரூபாயில், மானியம் ஒரு லட்சம் ரூபாய் போக, மீதமுள்ள 2.20 லட்சம் ரூபாயை கலெக்டர் தன் விருப்ப நிதியில் இருந்து வழங்கினார்.
புதிய ஆட்டோ சாவியினை, கலெக்டர் நேற்று, சாந்தா மற்றும் ரமேஷிடம் வழங்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

