/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
/
ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
ADDED : அக் 06, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதம் 15,000 ரூபாய் நிதி வழங்க கோரி, ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில், கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
ஆந்திர மாநிலத்தில் ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதேபோல, தமிழகத்திலும் நலிந்து வரும் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக அரசு மாதாந்திர நிதி வழங்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.