/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் நிலையத்தில் ஆட்டோக்கள் அட்டகாசம் இருசக்கர வாகன ஓட்டிகள் திணறல்
/
ரயில் நிலையத்தில் ஆட்டோக்கள் அட்டகாசம் இருசக்கர வாகன ஓட்டிகள் திணறல்
ரயில் நிலையத்தில் ஆட்டோக்கள் அட்டகாசம் இருசக்கர வாகன ஓட்டிகள் திணறல்
ரயில் நிலையத்தில் ஆட்டோக்கள் அட்டகாசம் இருசக்கர வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : டிச 04, 2024 11:32 PM

திருவள்ளூர்,
திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர், சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ளவர்கள், இருசக்கர வாகனங்களில் ரயில் நிலையம் வந்து, அங்குள்ள நிறுத்தங்களில் நிறுத்திச் செல்கின்றனர்.
மேலும், ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வோர் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர். தற்போது, ஆட்டோக்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், ரயில் நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து, ரயில்வே காவல்துறையிடம் அனுமதி பெற்ற ஆட்டோக்கள் மட்டுமே ரயில் நிலையம் வரை அனுமதிக்கப்படுகிறது.
பிற ஆட்டோக்கள் பெரியகுப்பம் பேருந்து நிறுத்தம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதற்காக சாலை நடுவில் போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர். இருப்பினும், சில ஆட்டோக்கள் சாலை தடுப்பின் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். இதனால், பயணியர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள், ரயில் நிலையத்திற்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.
எனவே, போக்குவரத்து போலீசார் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, நெரிசலை சீர்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.