/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று முதல் புது கட்டடத்தில் ஆவடி சார் - பதிவாளர் ஆபீஸ்
/
இன்று முதல் புது கட்டடத்தில் ஆவடி சார் - பதிவாளர் ஆபீஸ்
இன்று முதல் புது கட்டடத்தில் ஆவடி சார் - பதிவாளர் ஆபீஸ்
இன்று முதல் புது கட்டடத்தில் ஆவடி சார் - பதிவாளர் ஆபீஸ்
ADDED : ஜூலை 28, 2025 03:02 AM

ஆவடி:ஆவடி சார் - பதிவாளர் அலுவலகம், பருத்திப்பட்டிற்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது.
ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், ஆவடி மாநகராட்சி பகுதிகள், பூந்தமல்லி, திருநின்றவூர் நகராட்சிகள் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 33 பகுதிகளின் பத்திரப்பதிவுகள் நடந்து வருகின்றன. ஆவடி சார் - பதிவாளர் அலுவலகம், பட்டாபிராம், மாடர்ன் சிட்டி, எட்டாவது தெருவில் உள்ள தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆவடி, பருத்திப்பட்டு, அய்யங்குளம், ஆவடி வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம், 1.68 கோடி ரூபாயில், தரைத்தளம், முதல் தளம் முறையே 1,625 சதுர அடியில் கட்டப்பட்டது. தற்போது புதிய கட்டடத்தில் உள்கட்டமைப்பு பணிகள் முடிந்த நிலையில், இன்று முதல் பருத்திப்பட்டு, அய்யங்குளம் பகுதியில் ஆவடி சார் -பதிவாளர் அலுவலகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக, பழைய கட்டடத்தில் அறிவிப்பு பேனர் வைக்கப் பட்டுள்ளது.