sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பெண் குழந்தை வளர்ச்சியில் வீர செயல் புரிந்தோருக்கு விருது

/

 பெண் குழந்தை வளர்ச்சியில் வீர செயல் புரிந்தோருக்கு விருது

 பெண் குழந்தை வளர்ச்சியில் வீர செயல் புரிந்தோருக்கு விருது

 பெண் குழந்தை வளர்ச்சியில் வீர செயல் புரிந்தோருக்கு விருது


ADDED : டிச 10, 2025 06:35 AM

Google News

ADDED : டிச 10, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: பெண் குழந்தை வளர்ச்சியில் வீர தீர செயல் புரிந்த, 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு, சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்கு உட்பட்ட, பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தை தினமான ஜன., 24ல் மாநில அரசின் விருது வழங்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் 13- 18 வயதிற்கு உட்பட்ட, பெண்கள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுத்தல் உள்ளிட்டவற்றில், வீர, தீர செயல் புரிந்திருக்க வேண்டும். விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, பாராட்டு பத்திரம், 1 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படும்.

எனவே, விருது பெற தகுதி உடையோர், https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில், வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த ஆவணங்களை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us