/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆர்.டி.ஐ., குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு
/
ஆர்.டி.ஐ., குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு
ADDED : அக் 19, 2024 08:15 PM
பொன்னேரி:ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தும், அதன் நோக்கத்தை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் அக்டோர் மாதம், 'தகவல் அறியும் உரிமை சட்டம் வாரம்' கொண்டாடப்படுகிறது. அச்சமயம் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை பிரிவு சார்பில் பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகளிடம் ஆர்.டி.ஐ., குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொன்னேரி சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை பிரிவு பொன்னேரி கோட்ட அலுவலர் சுரேஷ்பாபு, சப்-கலெக்டரின் நேரடி உதவியாளர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.