/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழந்தை திருமணத்தை தடுக்க தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு
/
குழந்தை திருமணத்தை தடுக்க தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு
குழந்தை திருமணத்தை தடுக்க தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு
குழந்தை திருமணத்தை தடுக்க தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு
ADDED : நவ 12, 2025 10:19 PM

திருவள்ளூர்: குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து, தெருக்கூத்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், 'பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து, மக்கள் கூடும் இடங்களில், தெருக்கூத்து வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நடந்த தெருக்கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கலெக்டர் பிரதாப் பார்வையிட்டார்.
அதன்பின், அவர் கூறியதாவது:
சமூகநலத் துறை சார்பில், மாவட்டம் முழுதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல் போன்ற விழிப்புணர்வு, கலை நிகழ்ச்சி வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர் தடுப்பு, பாலியல் வன்கொடுமை போன்றவை நடக்கும் பட்சத்தில், பெண்களுக்கான இலவச உதவி எண் - 181, குழந்தைகளுக்கான இலவச உதவி எண் - 1098 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

