/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆலங்காடில் அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை
/
ஆலங்காடில் அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை
ADDED : டிச 04, 2024 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை,ஊத்துக்கோட்டை அருகே, ஆலங்காடு கிராமத்தில், முதலாம் ஆண்டு அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை விழா நடந்தது.
இதையொட்டி, கடந்த 3ம் தேதி காலை, விநாயகர் பூஜை, கிராம தேவதை பூஜை ஆகிய பூஜைகள் நடத்தப்பட்டு, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, சென்டமேளம் முழங்க, பெண்கள் விளக்கேந்தி, பஜனை குழுவினர் பாடல்களுடன், உற்சவர் அய்யப்ப சுவாமி கிராமத்தில் உள்ள வீதிகள் வழியே, சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.