/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பி.பார்ம்., டி.பார்ம்., படித்தவர்களுக்கு முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு

ADDED : நவ 08, 2024 09:01 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் சண்முகவள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள, பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றோர் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 20க்குள் விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளோருக்கு, 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ், வாடகை இடம் எனில் இடத்திற்கான உரிமையாளரிடம் இடம் ஒப்பந்த பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் 3 லட்சம் ரூபாய் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படும்.
தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.