/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவன் கடத்தல் வழக்கு மூவருக்கு ஜாமின் ரத்து
/
சிறுவன் கடத்தல் வழக்கு மூவருக்கு ஜாமின் ரத்து
ADDED : செப் 06, 2025 01:04 AM
திருவள்ளூர்:காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தை உட்பட மூவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை, திருவள்ளூர் விரைவு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை, கடந்த ஏப்ரல் 15ம் தேதி காதல் திருமணம் செய்தார்.
விஜயஸ்ரீ தந்தை வனராஜ் தரப்பினர், தனுஷின் 17 வயது தம்பியை, ஜூன் 7ம் தேதி ஏ.டி.ஜி.பி., ஜெயராம் பயன்படுத்தும் காரில் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து, வனராஜ், விருப்ப ஓய்வு பெற்ற காவலர் மகேஸ்வரி, புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார், கணேசன், மணிகண்டன், குமார், டேவிட் ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் வனராஜ், கணேசன், மணிகண்டன் ஆகிய மூன்று பேருக்கும், ஆகஸ்ட் 10ம் தேதி திருவள்ளூர் முதலாவது நீதித்துறை நடுவர் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், ஆகஸ்ட 13ம் தேதி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், திருவள்ளூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜூலியட் புஷ்பா, முதலாவது நீதித்துறை நடுவர் வழங்கிய ஜாமின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.