/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்
/
மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்
ADDED : மார் 29, 2025 07:08 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று அமாவாசை ஒட்டி காலை 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
அதேபோல், திருத்தணி தணிகாசலம்மன், படவேட்டம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், துர்க்கையம்மன் உட்பட அனைத்து அம்மன் கோவில்களிலும், அமாவாசையை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. மேலும், அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் சேவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.