/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் பந்தக்கால்
/
சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் பந்தக்கால்
ADDED : அக் 25, 2025 02:30 AM

திருவாலங்காடு: சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் நேற்று பந்தக்கால் நடப்பட்டது. நவ., 3ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுடன் இணைந்தது பழையனுார் சாலையில் அமைந்துள்ள சாட்சிபூதேஸ்வரர் கோவில்.
இக்கோவிலில், 2004ல் கும்பாபிஷேக விழா நடந்தது. 2020ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெறவிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், ஆறு மாதமாக கோவில் சீரமைப்பு பணி நடந்தது. நவ., 3ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில், நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் 8:50 மணிக்கு யாகசாலை பந்தல் நடப்பட்டது.

