/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மகளிர் சுயஉதவி குழுவுக்கு ரூ.167 கோடி வங்கி கடன்
/
மகளிர் சுயஉதவி குழுவுக்கு ரூ.167 கோடி வங்கி கடன்
ADDED : செப் 17, 2025 09:35 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட மகளிர் குழுவினருக்கு, 167 கோடி ரூபாய் வங்கி கடன் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மகளிர் உதவிக் குழுவினருக்கு வங்கி கடன் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், 19,439 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன. அவற்றில், 2,52,707 பேர் உறுப்பினராக உள்ளனர். நடப்பு 2025 - -26ம் ஆண்டில் சுயஉதவிக் குழுவுக்கு, இதுவரை 382 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதில், 15,757 பயனாளிகளுக்கு, 167 கோடி ரூபாய் வங்கி கடன், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.