/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் நிறுத்தத்தில் பேனர்கள் விபத்து அச்சத்தில் பயணியர்
/
பஸ் நிறுத்தத்தில் பேனர்கள் விபத்து அச்சத்தில் பயணியர்
பஸ் நிறுத்தத்தில் பேனர்கள் விபத்து அச்சத்தில் பயணியர்
பஸ் நிறுத்தத்தில் பேனர்கள் விபத்து அச்சத்தில் பயணியர்
ADDED : மே 04, 2025 01:59 AM

கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அருகே தச்சூர் கூட்டுச்சாலை உள்ளது. இங்கு பொன்னேரி, சென்னை, கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று சாலைகள் சந்திக்கின்றன. இதனால், எப்போதும் அப்பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.
இங்கு, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால், சாலையோரம் பயணியர் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிறுத்தத்தில், விளம்பர பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.
எந்த நேரத்தில் பேனர் விழுமோ என்ற அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலையில் பயணியர் உள்ளனர்.
எனவே, பயணியரின் பாதுகாப்பு கருதி, அப்பகுதியில் உள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், பேனர்கள் வைக்காமல் இருக்க, கவரைப்பேட்டை போலீசார் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

