/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் விபத்து தடுக்க வளைவுகளில் தடுப்பு அமைப்பு
/
நெடுஞ்சாலையில் விபத்து தடுக்க வளைவுகளில் தடுப்பு அமைப்பு
நெடுஞ்சாலையில் விபத்து தடுக்க வளைவுகளில் தடுப்பு அமைப்பு
நெடுஞ்சாலையில் விபத்து தடுக்க வளைவுகளில் தடுப்பு அமைப்பு
ADDED : நவ 25, 2024 02:25 AM

திருத்தணி:திருத்தணி- - பொதட்டூர்பேட்டை செல்லும் நெடுஞ்சாலையில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் அபாயகர வளைவுகள் உள்ளன. இச்சாலை வழியாக, 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வேன், கார், லாரி மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்றவாறு இருக்கும். இந்நிலையில், நெடுஞ்சாலையில் உள்ள வளைவுகளில் அதிவேகமாக வரும் வாகனங்கள் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தவிக்கின்றன.
குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையோர வளைவுகளில் தினமும் குறைந்த பட்சம், 10 முதல் 20 வாகன ஓட்டிகள் நேருக்கு நேர் மோதிக் கொள்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் பலத்த காயம் அடைகின்றனர்.
இதையடுத்து திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் திருத்தணி- பொதட்டூர்பேட்டை செல்லும் நெடுஞ்சாலையில் சாலையோர வளைவுகளில் அலுமினிய தகடு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அலுமமினிய தகடு மேல் ஒளிரும் விளக்கு அமைக்கப்படவுள்ளது.
தற்போது சாலையோர வளைவுகளில் தடுப்புகள் அமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
★★