/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் கூடை தயார் செய்து விற்பனை ஆந்திர குடும்பங்களுக்கு வாழ்வு தரும் தமிழகம்
/
திருவள்ளூரில் கூடை தயார் செய்து விற்பனை ஆந்திர குடும்பங்களுக்கு வாழ்வு தரும் தமிழகம்
திருவள்ளூரில் கூடை தயார் செய்து விற்பனை ஆந்திர குடும்பங்களுக்கு வாழ்வு தரும் தமிழகம்
திருவள்ளூரில் கூடை தயார் செய்து விற்பனை ஆந்திர குடும்பங்களுக்கு வாழ்வு தரும் தமிழகம்
ADDED : அக் 25, 2025 11:07 PM

திருவள்ளூர்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினர், திருவள்ளூர் பகுதியில் கூடை முடைந்து, விற்பனை செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், கூடூர் அடுத்த சென்னுாரை சேர்ந்தவர்கள், பாரம்பரியாக ஈச்சங் குச்சியில் கூடை முடைந்து விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்மாநிலத்தில், கூடைகள் விற்பனை முடங்கியதால், நான்கு குடும்பத்தினர், தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், சிறுவானுார் கண்டிகையில் உள்ள அம்பேத்கர் நகர் அருகே குடிசை அமைத்து, ஈச்சங்குச்சியில் கூடைகளை முடைந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கூடையின் தரத்திற்கு ஏற்ப, 100 - 600 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேசலு கூறியதாவது:
ஆந்திர மாநிலத்தில், நாங்கள் பாரம்பரியாக கூடை முடையும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் மாநிலத்தில் தொழில் விற்பனை சரியாக இல்லை. இதனால், நானும், என் சகோதரர், சகோதரிகள் குடும்பத்தைச் சேர்ந்த, 20 பேர் திருவள்ளூர் வந்துள்ளோம்.
முதல் முறையாக தமிழகத்திற்கு வந்துள்ள நாங்கள், இங்கு தினமும், பெரிய அளவிலான கோழி அடைக்கும் கூடை, பூ கூடை உள்ளிட்ட பல்வேறு வகையிலான கூடைகளை முடைந்து வருகிறோம்.
நாங்கள் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான டெஸ்க் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான துடைப்பம் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், இருசக்கர வாகனத்தில் சென்று விற்பனை செய்து வருகிறோம்.
உற்பத்தி பொருட்களை, சாலையோரம் வைத்தும் விற்பனை செய்து வருகிறோம். இந்த பொருட்களை, பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

