/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,ல் பேட்டரிகள் திருட்டு
/
எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,ல் பேட்டரிகள் திருட்டு
ADDED : அக் 13, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் பகுதியில், எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்தில் இருந்த, ஆறு யூ.பி.எஸ்., பேட்டரிகள் திருட போனது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது, இம்மாதம், 10ம் தேதி, இரு மர்ம நபர்கள் பேட்டரிகளை திருடி சென்றது தெரியவந்தது.
வங்கியின் பொன்னேரி கிளை மேலாளர் பத்மநாபன் அளித்த புகாரின் பேரில், கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பேட்டரி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.