/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு 'பேட்டரி' சக்கர நாற்காலி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு 'பேட்டரி' சக்கர நாற்காலி
ADDED : ஜூலை 17, 2025 02:13 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பேட்டரி சக்கர நாற்காலி வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும் தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவட பாதிப்பால் கை, மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 'பேட்டரி'யில் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இத்திட்டத்தினை விரிவுப்படுத்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மூளை முடக்கு வாதம் உள்ளிட்ட இதர குறைபாட்டினால் இரண்டு கால்கள் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கும், 'பேட்டரி'யில் இயங்கும் சக்கர நாற்காலியாகவும், மூன்று சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட உபகரணம் வழங்கப்படுகிறது.
இதை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் அருகாமையில் உள்ள இ- சேவை மையம் அல்லது திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், ஆக.29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.