/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கலெக்டர் அலுவலக 'போர்டிகோ'வில் தேன் கூடு கட்டியுள்ள தேனீக்கள்
/
கலெக்டர் அலுவலக 'போர்டிகோ'வில் தேன் கூடு கட்டியுள்ள தேனீக்கள்
கலெக்டர் அலுவலக 'போர்டிகோ'வில் தேன் கூடு கட்டியுள்ள தேனீக்கள்
கலெக்டர் அலுவலக 'போர்டிகோ'வில் தேன் கூடு கட்டியுள்ள தேனீக்கள்
ADDED : பிப் 06, 2025 01:30 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் உள்ள தேன் கூடுகளால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம், திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில், கலெக்டர் கார் நிறுத்தும் 'போர்டிகோ' கூரையில், தேன் கூடுகள் உள்ளன.
அந்த தேன் கூடுகளில் இருந்து வெளியேறும் தேனீக்கள், கலெக்டர் அலுவலகத்திற்குள்ளும், வெளியிலும் பறந்து, ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இதனால், அலுவலகத்திற்கு வரும் ஊழியர் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். அவ்வப்போது, தேனீக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் பறந்து, அங்குள்ளோரை கடித்து வருகின்றன.
எனவே, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேன்கூட்டினை, விடுமுறை நாட்களில் தீயணைப்பு துறையினர் வாயிலாக அகற்ற வேண்டும் என, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.