/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிராமங்களை பாதுகாக்க துாண்டில் வளைவு ...கடல் அரிப்பு:வலுத்து வருகிறது மீனவ மக்களின் கோரிக்கை
/
கிராமங்களை பாதுகாக்க துாண்டில் வளைவு ...கடல் அரிப்பு:வலுத்து வருகிறது மீனவ மக்களின் கோரிக்கை
கிராமங்களை பாதுகாக்க துாண்டில் வளைவு ...கடல் அரிப்பு:வலுத்து வருகிறது மீனவ மக்களின் கோரிக்கை
கிராமங்களை பாதுகாக்க துாண்டில் வளைவு ...கடல் அரிப்பு:வலுத்து வருகிறது மீனவ மக்களின் கோரிக்கை
ADDED : ஜூலை 22, 2025 09:32 PM

பழவேற்காடு:பழவேற்காடில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடல் அரிப்பின் காரணமாக, கடலுக்கும், கடற்கரையோர கிராமங்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்து, மீனவ மக்கள் அச்சத்திற்கு ஆளாகி வருவதால், பாறை கற்களை கொண்டு துாண்டில் வளைவுகளை உருவாக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ பகுதி, வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இதில், கூனங்குப்பம் மீனவ கிராமத்தில் துவங்கி திருமலைநகர், லைட்அவுஸ்குப்பம், அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரைகுப்பம், காளஞ்சி, காட்டுப்பள்ளி வரை, 15 கிராமங்கள் உள்ளன.
அமாவாசை, பவுர்ணமி இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கடலில் மீன்பிடி தொழில் செய்வது. புயல், மழைக்காலங்களில் கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும். கடல் அலைகள் கடற்கரையை கடந்து, மீனவ கிராமங்களின் குடியிருப்புகள் வரை வந்து செல்லும்.
அதேபோன்று, அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் கடல் அலைகள் அதிகம் காணப்படும். இதுபோன்ற காரணங்களால் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுகிறது.
புயல் அல்லாத நேரங்களிலும், பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் அதிக கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், கடல் அரிப்பும் உண்டாகிறது.
கடல் அரிப்பால் கடலுக்கும், மீனவ கிராமங்களுக்குமான இடைவெளி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
குறிப்பாக திருமலைநகர், செம்பாசிப்பள்ளி, கூனங்குப்பம், கோரைகுப்பம், வைரவன்குப்பம் ஆகிய கிராமங்கள், அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன.
தற்போது, மேற்கண்ட கிராமங்களில் கடலுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்குமான இடைவெளி, 50 - 100 மீ., அளவில் உள்ளது.
கேள்விக்குறி புயல் காலங்களில் கடல் அலைகள் கரையை கடந்து, பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையேயான கிழக்கு கடற்கரை சாலை வரை பாய்கிறது. அச்சமயங்களில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கிறது.
கடந்தாண்டு மழையின் போது, காளஞ்சி கிராமத்தில் கடல் அரிப்பால், அங்குள்ள சாலையே கடல்நீரில் அடித்து செல்லப்பட்டது.
ஒவ்வொரு கடற்கரையோர மீனவ கிராமங்களும், கடல் அரிப்பால் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. இதனால், கடலோர மீனவ கிராமங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
கடல் அரிப்பை தடுக்க, மீன்வளத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு பாறை கற்கள், நட்சத்திர கான்கிரீட் வார்ப்புகள் ஆகியவற்றை கொண்டு, துாண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடல் அரிப்பால், மீனவ கிராமங்களில் அச்சம் நிலவுகிறது. பாதிப்பிற்குள்ளாகி வரும் மீனவ கிராமங்களையும், அங்குள்ள மக்களையும் பாதுகாக்கும் வகையில், கடற்கரையோரங்களில் நட்சத்திர வடிவிலான கான்கிரீட் வார்ப்பு கற்கள் பதித்து, பாதுாப்பு அரண்களை உருவாக்க வேண்டும். மேலும், கடல் அரிப்பு, சுனாமி போன்றவற்றை தடுக்கும் வகையில், கடற்கரை பகுதிகளில் மரங்கள், செடிகள் என, பசுமையான தடுப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இது, கடல் அலைகளின் தாக்கத்தை குறைத்து, கடல் அரிப்பின் பாதிப்புகளை குறைக்கும். - மீனவ கிராம மக்கள்