/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
10 ஆண்டு போராட்டத்திற்கு பலன் துணை சுகாதார நிலைய பணி துவக்கம்
/
10 ஆண்டு போராட்டத்திற்கு பலன் துணை சுகாதார நிலைய பணி துவக்கம்
10 ஆண்டு போராட்டத்திற்கு பலன் துணை சுகாதார நிலைய பணி துவக்கம்
10 ஆண்டு போராட்டத்திற்கு பலன் துணை சுகாதார நிலைய பணி துவக்கம்
ADDED : பிப் 11, 2025 12:17 AM
திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், தும்பிக்குளம் கிராமத்தில், 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சுற்றியும், ஏழு கிராமங்கள் உள்ளன. மேற்கண்ட கிராமத்தினர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, 10 கி.மீ., துாரத்தில் உள்ள திருத்தணி அரசு மருத்துவமனை அல்லது பூனிமாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டியுள்ளது.
இதையடுத்து, ஊராட்சி முன்னாள் தலைவர் கோபி தலைமையில், தும்பிக்குளம் கிராமத்தினர், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, கலெக்டர், மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு வரை தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தும் வந்தனர்.
இதுதவிர, மாவட்ட அமைச்சர், திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ., ஆகியோர் வாயிலாகவும், ஊராட்சி முன்னாள் தலைவர் கோபி, பொதுமக்களுடன் இணைந்து துணை சுகாதார நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும் என, 10 ஆண்டுகளாக போராடி வந்தனர்.
இதன் பயனாக நேற்று, தும்பிக்குளம் திரவுபதியம்மன் கோவில் வளாகம் அருகே, அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு, 41 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டுவதற்கு, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
இப்பணிகள், ஆறு மாதத்தில் முடித்து, துணை சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
பத்து ஆண்டு போராட்டத்திற்கு விடிவாக, ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமையும்பட்சத்தில், சுற்றியுள்ள ஏழு கிராமத்தினரும் பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.