/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டேங்கர் லாரியில் இருந்த 'பென்சைன்' ரசாயனம் கசிவு
/
டேங்கர் லாரியில் இருந்த 'பென்சைன்' ரசாயனம் கசிவு
ADDED : மே 15, 2025 12:16 AM

கும்மிடிப்பூண்டி:ஹரியானா மாநிலத்தில் உள்ள 'இந்தியன் ஆயில்' நிறுவனத்தில் இருந்து, 42,000 லிட்டர் பென்சைன் ரசாயனம் ஏற்றிக்கொண்டு, டேங்கர் லாரி ஒன்று, சென்னை மணலி யில் உள்ள 'தமிழ்நாடு பெட்ரோ கெமிக்கல் லிமிடெட்' நிறுவனத்திற்கு, நேற்று காலை சென்று கொண்டிருந்தது.
ஆறு பகுதியாக பிரிக்கப்பட்ட டேங்கரில், ஒவ்வொரு பகுதியிலும், 7,000 லிட்டர் பென்சைன் ரசாயனம் இருந்தது. இந்த ரசாயனம் எளிதில் தீப்பற்றக்கூடியது. கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், ஓட்டுநர் தீடீரென லாரியை நிறுத்தினார்.
அதன் டிரைவரான, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சன்ச்சல் சிங் என்பவர் ஓடிச்சென்று, டேங்கரில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ரசாயனம் கசிவதாக, பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார். இந்த கசிவால் கண் எரிச்சல் ஏற்பட்டது.
தகவல் அறித்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு பகுதி டேங்கரில் இருந்து, 7,000 லிட்டர் பென்சைன் முற்றிலும் கசிந்து முடியும் வரை, தீப்பிடிக்காமல் இருக்க தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.
ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின், கசிவு நின்றதை உறுதி செய்தபின், லாரி புறப்பட்டுச்சென்றது.
இந்த சம்பவத்தால், எளாவூர் சோதனைச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.