/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் போகிப்பண்டிகை கோலாகலம்
/
திருவள்ளூரில் போகிப்பண்டிகை கோலாகலம்
ADDED : ஜன 13, 2025 11:57 PM

கடம்பத்துார், மார்கழியின் கடைசி நாளில் கொண்டாடப்படும் போகி பண்டிகை பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையின் முக்கிய கருத்து.
பொங்கல் பண்டிகைக்கு முன் கொண்டாடப்படும் போகிப்பண்டிகை, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சிறப்பிக்கப்படும்.
உழவுக்கு வழிவகை செய்த கதிரவனுக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் பசுவுக்கும் நன்றி சொல்லும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் போகிப்பண்டிகையை சிறுவர்கள் உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.
வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், தேவை இல்லாத பொருட்களை புறக்கணித்து, அதை தீயிலிட்டு கொளுத்துவது போகியின் முக்கிய விஷயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த போகி பண்டிகையானது நேற்று, திருவள்ளூர் மாவட்டம் முழுதும் சாரல் மழை பெய்தாலும் கடம்பத்துார், மணவாளநர், புட்லுார், ஈக்காடு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி திருத்தணி ஆகிய பகுதிகளில் அதிகாலை 3:00 மணி முதல் இருட்டோடு எழுந்து தங்களுடைய வீட்டில் உள்ள பழைய பொருட்கள் மற்றும் பயன்பாடாற்ற பொருட்கள் ஆகியவற்றை தீவைத்து கொளுத்தி அதைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டு சிறுவர்கள் பெற்றோர் என ஒன்றிணைந்து மேள தாளங்கள் முழங்க போகிப் பண்டிகை கொண்டாடினர்.
திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில், நேற்று, போகி பண்டிகை என்பதால் அதிகாலை, 3:00 மணி அளவில் வீடுகள் முன் பனை ஓலைகள், மற்றும் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை போட்டு தீயிட்டு கொளுத்தி 'போகியோ போகி' என, கொண்டாடினர்.

