/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் இன்று சைக்கிள் பந்தயம்
/
திருவள்ளூரில் இன்று சைக்கிள் பந்தயம்
ADDED : செப் 26, 2025 10:37 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், இன்று அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், இன்று காலை முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த தினத்தை ஒட்டி, ஆண், பெண் இருபாலருக்கும் சைக்கிள் போட்டி நடக்கிறது.
இதில், 13 வயதிற்கு உட்பட்ட மாணவருக்கு 15 கி.மீ., மாணவியருக்கு 10 கி.மீட்டரும், 15 - 17 வயதிற்கு உட்பட்ட மாணவருக்கு 20, மாணவியருக்கு 15 கி.மீட்டர் என, போட்டிகள் நடைபெற உள்ளன.
மேலும், நாளை காலை மாரத்தான் போட்டி நடக்கிறது. இதில், 17 - 25 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் 8 கி.மீ., பெண்கள் 5 கி.மீட்டர்; 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 10 கி.மீட்டர், பெண்கள் 5 கி.மீட்டர் துாரம் என, போட்டிகள் நடக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.