நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த, சிறுகுமி பகவாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு, 26. இவர், நேற்று முன்தினம், 'கேடிஎம் டியூக்' பைக்கில், திருத்தணி நகருக்கு வந்தார். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு இரவு, வீட்டிற்கு சென்றார்.
பின், வீட்டின் முன், 'கேடிஎம் டியூக்' பைக்கை நிறுத்திவிட்டு வீட்டில் துாங்கினார். நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, பைக் திருடப்பட்டது தெரிந்தது. இது குறித்து விஷ்ணு அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

