நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், அருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர், 22; இவர், நேற்று முன்தினம், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு, 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் வந்தார்.
பின், மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பூட்டி விட்டு உள்ளே சென்று சிகிச்சை பெற்று வெளியே வந்த பார்த்த போது, வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து, ஞானசேகர் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன், இருசக்கர வாகனத்தை திருடிய, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், வன்னியமோட்டூர் பகுதியைச் சேர்ந்த சரவணன், 26, என்பவரை, கைது செய்தனர். மேலும், இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.