/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காய்கறி வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி
/
காய்கறி வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி
ADDED : ஆக 30, 2025 12:10 AM
திருவாலங்காடு, -
திருவாலங்காடு அருகே காய்கறி ஏற்றிச் சென்ற வாகனம் மோதியதில், பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமுச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்ரோஹித், 23; திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இவர், நேற்று காலை 11:00 மணிக்கு, 'கே.டி.எம்.,' பைக்கில், திருவள்ளூர் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஈக்காடு அருந்ததிபுரத்தைச் சேர்ந்த நண்பர் தியாகராஜன், 18, என்பவரை ஏற்றிச் சென்றார்.
அரக்கோணம் --- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அடுத்த கூடல்வாடி அருகே சென்ற போது, எதிரே காய்கறி ஏற்றி வந்த 'ஈச்சர்' வாகனம் பைக் மீது மோதியது.
இதில், ஜெகன்ரோஹித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தியாகராஜன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெகன்ரோஹித்தின் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த திருவாலங்காடு போலீசார், தப்பியோடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

