/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிரியாணி சாப்பிட்டோர் மருத்துவமனையில் 'அட்மிட்'
/
பிரியாணி சாப்பிட்டோர் மருத்துவமனையில் 'அட்மிட்'
ADDED : செப் 19, 2024 08:48 PM
பொன்னேரி:பிரபல தனியார் பிரியாணி நிறுவனத்திற்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. அனைத்து கடைகளுக்கும், சோழவரம் அடுத்த அலமாதி பகுதியில் மொத்தமாக பிரியாணி தயார் செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி அந்நிறுவனத்தின் பொன்னேரி கடையில் பிரியாணி மற்றும் சிக்கன் லாலிபாப் உள்ளிட்டவைகளை வாங்கி சாப்பிட்ட சிலருக்கு, வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, அவர்கள் இரண்டு நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பாதிப்பு நீடித்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், நேற்று பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொன்னேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், பொன்னேரி பகுதியைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்கு உள்ளாகி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் பொன்னேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.