/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துார்வாராத கால்வாயில் அடைப்பு: கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு
/
துார்வாராத கால்வாயில் அடைப்பு: கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு
துார்வாராத கால்வாயில் அடைப்பு: கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு
துார்வாராத கால்வாயில் அடைப்பு: கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு
ADDED : ஆக 03, 2025 12:30 AM

திருவள்ளூர்:ஜே.என்.சாலையில் துார் வாராத மழைநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம்போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சென்னை, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து திருப்பதி, திருத்தணி செல்லும் வாகனங்கள், திருவள்ளூர் ஜே.என்.சாலையை பயன்படுத்தி வருகின்றன.
இச்சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலை துறை சார்பில், மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் வெளியேற வழியின்றி, கால்வாயிலேயே கழிவுநீராக மாறியுள்ளது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், ஜே.என்.சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே, மழைநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக, சாலையோரம் நடந்து செல்ல முடியாமல், அப்பகுதிமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தேங்கிய கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சாலையோரம் உள்ள கால்வாயை துார்வாரி, கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.