/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு
/
பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு
ADDED : ஏப் 26, 2025 10:05 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம், செஞ்சியம்மன் நகரில், நேற்று காலை, நாய் ஒன்று, பச்சிளம் குழந்தையின் சடலத்தை கவ்வியபடி சுற்றித்திரிந்தது.
இதை கண்ட கிராமவாசிகள். நாயை விரட்டியபோது, சடலத்தை கீழே போட்டுவிட்டு ஓடியது.
தலை மற்றும் வலது கை இல்லாமல், தொப்புள் கொடியுடன், ஆண் குழந்தையின் சடலமாக இருப்பதை கண்டு கிராமவாசிகள் அதிர்ச்சியுற்றனர்.
இது குறித்து திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று, பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பச்சிளம் குழந்தையை வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து திருப்பாலைவனம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்த, இரண்டு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சடலம், மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.