/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு
/
மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு
ADDED : செப் 20, 2025 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்.
ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் வசித்து வந்தவர் ஏழுமலை, 52. நேற்று முன்தினம் மாலை, ஊத்துக்கோட்டை ஏரியில் மீன் பிடிக்கச் சென்றார். இரவு வரை வீடு திரும்பாததால், தேர்வாய்கண்டிகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினரின் தேடுதலுக்குப் பின், ஏழுமலை சடலமாக மீட்கப்பட்டார். ஊத்துக்கோட்டை போலீசார், விசாரிக்கின்றனர்.