/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் போகி மேளம் விலை அதிகரிப்பு
/
திருத்தணியில் போகி மேளம் விலை அதிகரிப்பு
ADDED : ஜன 11, 2025 11:42 PM

திருத்தணி:தமிழகம் முழுதும் பொங்கல் திருவிழா, போகி பண்டிகை விழாவுடன் நாளை துவங்குகிறது. நாளை மறுநாள், பொங்கல் விழாவும், 15ம் தேதி மாட்டுப்பொங்கலும், 16ம் தேதி காணும் பொங்கல் விழாவும் நடைபெறுகிறது.
இந்நிலையில், நாளை போகி பண்டிகையொட்டி, திருத்தணி நகரத்தில் ம.பொ.சி.சாலை, கந்தசாமி தெரு, சித்துார் சாலை மற்றும் அரக்கோணம் சாலை ஆகிய பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகளில்  போகி மேளம் விற்பனை செய்கின்றனர்.
இதை வாங்குவதற்கு திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள  கிராமங்களில் இருந்து சிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். கடந்தாண்டு விட நடப்பாண்டில் போகி மேளம் அதிகரித்துள்ளது.
உதாரணமாக, திருத்தணியில் கடந்தாண்டு போகி மேளம், குறைந்தபட்சம், 10 - 125 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், தற்போது,போகி மேளம் குறைந்தபட்சம், 20 - 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகம் இருப்பினும் சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

