/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போகி பண்டிகை கொண்டாட்டம் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
/
போகி பண்டிகை கொண்டாட்டம் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
போகி பண்டிகை கொண்டாட்டம் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
போகி பண்டிகை கொண்டாட்டம் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
ADDED : ஜன 15, 2024 12:02 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியில், நேற்று அதிகாலை 4:00 மணி முதல் பொதுமக்கள், போகி பண்டிகையை கொண்டாடினர். பழைய பொருட்களை வீட்டின் முன் குவித்து தீயிட்டு எரித்தனர்.
இதனால், கொழுந்து விட்டு எரிந்த தீயை சுற்றி சிறுவர்கள் உற்சாகமாக மேளம் தட்டி மகிழ்ந்தனர். முதியவர்கள், பெண்கள் சுற்றி அமர்ந்து குளிர் காய்ந்தனர்.
போகி புகையுடன், மார்கழி மாத பனியும் சேர்ந்ததால், எங்கு பார்த்தாலும் பனிப்புகையாகவே காட்சியளித்தது. குடியிருப்பு பகுதிகள், சாலைகள், தெருக்கள் அனைத்தும் பனிப்புகையில் மூழ்கின.
குறிப்பாக, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், பனிப்புகை சூழ்ந்ததால், முன்னாள் சென்ற வாகனங்கள் கண்ணுக்கு புலப்படாத நிலை ஏற்பட்டது. ஆபத்தான சூழலை உணர்ந்து வாகன ஓட்டிகள், பார்க்கிங் விளக்குகளை ஒளிரவிட்டபடி, சாலையில் ஊர்ந்து சென்றனர்.
பல வாகன ஓட்டிகள், பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தி ஓய்வு எடுத்தனர். காலை 9:00 மணிக்கு மேல் ஓரளவு பனிப்புகை அடங்கியதும் புறப்பட்டு சென்றனர். மேலும், ஆஸ்துமா நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.இதையடுத்து, நேற்றைய போகி பண்டிகை கொண்டாட்டம், வாகன ஓட்டிகளுக்கும், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் திண்டாட்டமாக மாறியது.