/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 04, 2025 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து, திருவள்ளூர் நகர போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று ஒரு மெயில் வந்தது.
திருவள்ளூர் நகர போலீசார் வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் மோப்ப நாயுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அதில், வெடிகுண்டு எதுவும் இல்லை. வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து மெயில் அனுப்பிய நபர் குறித்து, விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.