/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் பேனர் வைப்பதில் போட்டா போட்டி
/
நெடுஞ்சாலையில் பேனர் வைப்பதில் போட்டா போட்டி
ADDED : அக் 14, 2024 06:15 AM
திருவள்ளூர் : நெடுஞ்சாலையோரங்களில் விளம்பர பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டும் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலையோர உயரமான கட்டடங்கள் மீது பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது.
இந்த நெடுஞ்சாலையில் திருமழிசை, வெள்ளவேடு, புதுச்சத்திரம், அரண்வாயல்குப்பம், மணவாள நகர் உட்பட பல பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரித்து வருவது வாகன ஒட்டிகள் கவனம் சிதறி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
தற்போது நெடுஞ்சாலையோர உயரமான கட்டடங்களில் விளம்பர பேனர்களுக்கு போட்டியாக ஆளும் தி.மு.க., கட்சியினரும் களம் இறங்கியுள்ளனர்.
தற்போது வடகிழக்கு மழை துவங்கிய நிலையில் காற்று போன்ற இயற்கை சீற்றத்தால் விளம்பர பேனர்கள் கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்படும் நிலை ஏற்படுமென வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர்.
எனவே, நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்கள் மீது பேனர் வைப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள்மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வெங்கத்துார் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, 'நெடுஞ்சாலையோர கட்டடங்கள் மீது வைக்கப்படும் விளம்பர பேனர்களுக்கு கட்டணமாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் சில தனியார் விளம்பர நிறுவனங்கள் செலுத்தியுள்ளன. கட்டணம் செலுத்தாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம்' என்றனர்.