/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஐஸ்ஹவுசில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை
/
ஐஸ்ஹவுசில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை
ஐஸ்ஹவுசில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை
ஐஸ்ஹவுசில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை
ADDED : ஜன 31, 2025 02:46 AM

சென்னை:சென்னை, திருவல்லிக்கேணி, கஜபதி தெருவைச் சேர்ந்தவர் தனுஷ், 24;குத்துச்சண்டை வீரர்.
நேற்று முன்தினம்நள்ளிரவு, 1:00 மணிக்கு, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நண்பர் அருண்குமார், 25, என்பவருடன், கிருஷ்ணாம்பேட்டை மயானபூமி அருகே நடந்து சென்றார்.
அப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த ஒன்பது பேர் உடைய மர்ம கும்பல், அவர்களை சுற்றி வளைத்தது.
மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்திகளை எடுத்த அந்த கும்பல், தனுஷை தாக்க முயன்றது. அவர்களை முதலில் தடுத்த குத்துச்சண்டை வீரர் தனுஷ், ஒருகட்டத்திற்கு மேல்தாக்குப்பிடிக்க முடியாமல், அங்கிருந்து ஓடினார்.
எனினும் அந்த கும்பல்,அவரை விடாமல் ஓட ஓடவிரட்டி, சரமாரியாக வெட்டியது. கை, காலில் பலமாக வெட்டிய கும்பல், ஆத்திரம் தீராமல், தனுஷின் தலையை இரண்டாக பிளந்து, கொடூரமாககொலை செய்தது. இதை தடுக்க முயன்ற தனுஷின் நண்பர் அருண்குமாருக்கு தலையில் வெட்டு விழுந்தது.
சம்பவம் குறித்து அறிந்த ஐஸ்ஹவுஸ் போலீசார், தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்த அருண்குமாரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தொடர்ந்து, கொலையாளிகள் வெளியூர் தப்பிச்செல்வதை தடுக்கும் வகையில், சென்னையின் அனைத்து எல்லைகளிலும் உள்ள சோதனைச்சாவடிகளை, போலீசார் உஷார்படுத்தினர்.
வழக்கு பதிந்த போலீசார், காயமடைந்த அருண்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், திருவல்லிக்கேணி, கஜபதிதெருவைச் சேர்ந்த மோகன், 27, மற்றும் அவரது நண்பர்கள், தனுஷை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மோகனின் மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்தபோது, ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த மோகன், செந்தில்குமார், 42, விஷால், 19, சுரேஷ்குமார், 20, ஆகிய நால்வரையும் கைது செய்தனர். இக்கொலையில் தொடர்புடைய மேலும் ஐந்து பேரையும் பிடித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திலேயே, கொலையாளிகளை ஐஸ்ஹவுஸ் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மோகன் பழைய குற்றவாளி என்பதுகுறிப்பிடத்தக்கது.
தனுஷ் தாய் கூறியதாவது:
மகனிடம் மொபைல்போனில் பேசி கொண்டிருந்தேன். 10 நிமிடங்களில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்றார். சிறிது நேரத்திலேயே, மகனை வெட்டி கொன்றதாக தகவல் வந்தது. தலை, கை, முதுகில் வெட்டுப்பட்டு உயிரிழந்து கிடந்தான். என் மகன் போலீஸ் ஆகிவிடக் கூடாது என நினைத்து கொன்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கூறினார்.