/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி ஓட்டுநரிடம் மொபைல்போன் பறித்த சிறுவர்கள் சிக்கினர்
/
லாரி ஓட்டுநரிடம் மொபைல்போன் பறித்த சிறுவர்கள் சிக்கினர்
லாரி ஓட்டுநரிடம் மொபைல்போன் பறித்த சிறுவர்கள் சிக்கினர்
லாரி ஓட்டுநரிடம் மொபைல்போன் பறித்த சிறுவர்கள் சிக்கினர்
ADDED : செப் 21, 2025 10:54 PM
பள்ளிப்பட்டு:லாரி ஓட்டுநரிடம் மொபைல்போன் பறித்த மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த காட்டூரைச் சேர்ந்தவர் மூர்த்தி, 45; லாரி ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம், கூடூரில் இருந்து புத்துார் வழியாக பள்ளிப்பட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பள்ளிப்பட்டு அருகே வெ ங்கம்பேட்டை அனுமன் கோவில் அருகே வந்த போது, லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர், மூர்த்தியை மிரட்டி, அவரிடம் இருந்த மொபைல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து மூர்த்தி, பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் பொதட்டூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் மூன்று பேரை கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.