/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீற்றிருந்த பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ தேர் திருவிழா
/
வீற்றிருந்த பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ தேர் திருவிழா
வீற்றிருந்த பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ தேர் திருவிழா
வீற்றிருந்த பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ தேர் திருவிழா
ADDED : மே 26, 2025 01:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமழிசை:திருமழிசையில் செண்பகவல்லி சமேத வீற்றிருந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, பிரம்மோற்சவ விழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 21ம் தேதி கருட சேவை நடந்தது.
பிரம்மோற்சவ திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. காலை 7:30 மணிக்கு கோவிலிலிருந்து புறப்பட்ட தேர், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, காலை 11:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. வரும் 29ம் தேதி சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.