/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
/
மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
ADDED : மார் 04, 2024 06:28 AM
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் அமைந்துள்ள புஷ்ப குஜாம்பாள் உடனுறை சிங்கீஸ்வரர் கோவிலில் 15ம் ஆண்டு பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா துவங்கி 10 நாட்கள் விழா நடக்கிறது.
முன்னதாக 26ம் தேதி காலை பந்தக்கால் நிகழ்ச்சியும் 1ம் தேதி கிராம தேவதை அபிஷேகமும், நேற்று காலை விநாயகர் உற்சவமும் நடந்தது.
தினமும் காலை சந்திரசேகர் மற்றும் மாலை சோமாஸ்கந்தர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலிப்பர்.
வரும் 10ம் தேதி காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. வரும் 13ம் தேதி கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறுகிறது.